கோவை மாங்கரை வனப்பகுதியில் உயிரிழந்த யானைக்கு பி.சி.ஆர் சோதனை - மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைப்பு…!

மேலும், ஆய்வு முடிவுகள் வரும்வரை யானையின் உடலை பாதுகாப்பாக வைத்து கண்காணிக்க வன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாங்கரை வனப்பகுதியில் உயிரிழந்த ஆண் காட்டு யானையின் உடல் மாதிரிகள் பி.சி.ஆர் சோதனைக்காக சென்னை அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை வனச்சரகம் மாங்கரை, சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே நேற்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில், நோய் தொற்றால் யானை இறந்ததா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் யானை உயிரிழப்பு குறித்து கண்டறிய மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், கால்நடை பராமரிப்புத் துறை கோவை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி, முதுமலை புலிகள் காப்பகம் கால்நடை மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் யானை உடல் மீட்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் மற்றும் வனக்காவலர் சுப்பிரமணியன் கவச உடை அணிந்து யானையின் உடல் அருகே சென்று சோதனைக்காக உடல் பாகங்களை சேகரித்தனர். மேலும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் உடலை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை மறு பக்கமாக திருப்பி போடப்பட்டது.



அப்போது யானையின் முன்னங்கால்களுக்கு இடையே ஆழமாக குத்துப்பட்ட காயம் இருப்பதும், வயிற்றுப் பகுதியில் குடல் சரிந்து வெளியே தள்ளி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற சிறப்புக் குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பி.சி.ஆர் சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.



ஆய்வு முடிவுகள் வரும்வரை யானையின் உடலை பாதுகாப்பாக வைத்துக் கண்காணிக்க வன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...