வனவிலங்கு ஆராய்ச்சி தன்னார்வலர் அமைப்பு நேஷனல் கன்சர்வேஷன் பவுண்டேஷன் மற்றும் வனத்துறையினர் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை: கோவை வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுப்பதற்காக தன்னார்வலர் தொண்டு நிறுவனம் தெருக்கூத்து பிரச்சாரம் நடத்தினார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மனித வன விலங்கு மோதலால் மனிதர்கள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. வால்பாறை பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி போன்றவைகளால் மக்களுக்கு அதிகம் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது.
இதனால் எதிர்பாராதவிதமாக மனிதனும், விலங்குகளும் மோதிக் கொள்ளும் நேரத்தில் மனித உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதைத் தடுப்பதற்காக வால்பாறையில் உள்ள வனவிலங்கு ஆராய்ச்சி தன்னார்வலர் அமைப்பு நேஷனல் கன்சர்வேஷன் பவுண்டேஷன் என்ற அமைப்பினரும் வனத்துறையினரும் இணைந்து, வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் நாள் கருமலை எஸ்டேட் பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ஆனைமலை புலிகள் காப்பகம் கல இயக்குனர் கணேசன் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். நேஷனல் கன்சர்வேஷன் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் கணேஷ் அவர்கள் நிகழ்ச்சியை மேற்பார்வை கொண்டு நடத்தினர்.

பொதுமக்கள் முன்னிலையில் இந்த தெருக்கூத்து மூலம் வன விலங்குகளிடமிருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது, விலங்குகளும் மனிதர்களும் ஒரே இடத்தில் பாதுகாப்பாக வாழ்வது எப்படி என்று தெருக்கூத்து நாடகம் கலை நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு பிரச்சாரம் செய்தனர்.
யானைகள் ஒரு இடத்தில் இருக்கும் பொழுது கவனமாக செல்ல வேண்டும். வனப்பகுதிகளில் மனிதர்கள் நடமாடக் கூடாது. வன பகுதியில் புகை பிடிப்பது வனப்பகுதியில் தீ பிடித்துக் கொள்ள நேரிடும் என்றும், வனவிலங்குகளை துன்புறுத்தக் கூடாது என்று பல்வேறு கருத்துக்களை கூறி கலை நிகழ்ச்சிகள் நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.