தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2022-23 தொடர்பாக டாக்ட் சங்கத்தின் கருத்துக்கள்..!

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கமான டாக்ட் சங்கம், நிதிநிலை அறிக்கையின் நிறை குறைகளை வெளியிட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2022-23 தொடர்பாக டாக்ட் சங்கத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்ட் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு 2022- 2023க்கான சமர்ப்பிக்கப்பட்டு உள்ள நிதிநிலை அறிக்கையில் அரசுப் பள்ளியில்‌ பயிலும்‌ 6ம்‌ வகுப்பு முதல்‌ 12ம் வகுப்பு வரை படிக்கும்‌ மாணவிகளுக்கு மேல்படிப்பு செல்ல உதவிடும்‌ வகையில்‌ மாதம்‌ ரூ.1000 பணம்‌ ஊக்கத் தொகையாக வழங்கப்படும்‌ என்ற அறிவிப்பை வரவேற்கிறோம்‌.

தொழில்‌ துறை சார்ந்த கைத்தொழில்‌ மேம்பாட்டுக் குழுமம்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ கொண்டு வந்ததையும், நிதி ஒதுக்கீடும்‌ வரவேற்கிறோம்‌.

தொழில்‌ துறையினர்‌ வாங்கும்‌ இயந்திரங்களுக்கும்‌ புதியதாக தொழில்‌ தொடங்குபவர்களுக்கும்‌ வழங்கி வரும்‌ மானியத்துக்காக 300 கோடி ஒதுக்கீடு வரவேற்கிறோம்‌.

எதிர்பார்ப்பு அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்‌ அளிப்பது:

தமிழகத்தில்‌ கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும்‌ குறுந்தொழில்களை பாதுகாக்க தனி கடன்‌ திட்டம்‌ அறிவிக்கை கோரியது நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றம்‌ அளிக்கிறது.

கோவை ஜாப்‌ஆடர்கள்‌ உதிரிபாகங்கள்‌ செய்து வரும்‌ குறுந்தொழில்‌ முனைவோர்களுக்கு, தனி குறுந்தொழில்‌ பேட்டை அமைப்பதற்கான நிதி

ஒதுக்கீடு செய்வார்கள்‌ என்ற எதிர்பார்ப்பும்‌ நிதிநிலையில்‌ இல்லாதது ஏமாற்றம்‌ அளிக்கிறது.

நிதிநிலை கூட்டத்தொடரில்‌ எதிர்பார்ப்பு:

நடைபெற இருக்கும்‌ நிதிநிலை‌ கூட்டத்தொடரில்‌ தமிழக அரசு உலக வங்கியில்‌ இருந்து தமிழக தொழில்‌ துறையினரை பாதுகாக்க தனிகடன்‌ பெற்று குறைந்த வட்டியில்‌ குறைந்த பட்சம்‌ 2 லட்சம்‌ வரை கடன்‌ வழங்கிட நடவடிக்கை எடுத்து இந்த பட்ஜெட்டில்‌ அறிவிக்க வேண்டுகிறோம்‌.

எவ்விதமான முகாந்தரம்‌ இல்லாமல்‌ கடுமையான மூல பொருள்‌ விலை ஏற்றத்தால்‌ தவித்து வரும்‌ தொழில்களை பாதுகாக்க தமிழக சட்டமன்றத்தில்‌ மூலபொருள்களின்‌ விலை நிர்ணயம்‌ செய்ய கமிட்டி அமைக்க வழியுறுத்தி சட்டமன்றத்தில்‌ தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வழியுறுத்திட வேண்டுகிறோம்‌.

தமிழகத்தில்‌ உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள்‌, தனியார்‌ துறை நிறுவனங்கள்‌ தமிழகத்தில்‌ உள்ள குறுந்தொழில்‌ முனைவோர்களிடம்‌ இருந்து 40 சதவீதம் ஜாப்‌ஆடர்களாகவும்‌ உதரிபாகங்களாகவும்‌ கொள்முதல்‌ செய்திட அறிவிப்பு செய்ய வேண்டும்‌ என்று எதிர்பார்க்கின்றோம்‌.

25 HP மின்சாரம்‌ வரை பயன்படுத்தி வரும்‌ குறுந்தொழில்‌ முனைவோர்களுக்கு மானிய விலை மின்சாரம்‌ வழங்கிட அறிவிப்பு செய்திட வேண்டுகிறோம்‌.

மேற்கண்ட எதிர்பார்ப்பும்‌ ஏமாற்றமும்‌ இந்த பட்ஜெட்டில்‌ தொடரில்‌ கலைந்து, தொழில்‌ முனைவோர்கள்‌ பயன்பாட்டுக்கு உதவிடும்‌ வகையில்‌ அறிவிப்புகள்‌ செய்து எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டுமாய்‌ அரசிடம்‌ எதிர்பார்‌க்கிறோம்‌. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...