கோவையில் தமிழக அரசின் சார்பில் பம்ப்செட் பரிசோதனைக்கூடம் ஒன்றையும், மூலப்பொருள் வங்கி ஒன்றை ஏற்படுத்தவும் கோப்மா சங்கம் சார்பாக வேண்டுகோள்.
கோவை: தமிழ்நாடு அரசின் 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்த கோப்மா சங்கத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோப்மா சங்கம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் 2022-2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் புதிய கதவணைகள் அமைப்பதற்கு ரூ.2787 கோடி ஒதுக்கீடு செய்தது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
ஏனென்றால், பல கிராமங்களில் வெய்யில் காலங்களில் 1000 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் கூட நீர்வற்றி பொதுமக்கள் குடிநீருக்குக்கூட அலையும் நிலையிருந்தது. ஆகவே இந்த ஒதுக்கீடு விவசாயத்திற்கு மட்டுமல்லாது குடிநீருக்கும் உகந்த திட்டமாகும்.
மின் கட்டண மானியமாக ரூ. 9379 கோடி ஒதுக்கீடு செய்தது மிகவும் வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தின்கீழ் 10 HP வரை உபயோகப்படுத்துகின்ற மெசின்ஷாப் மற்றும் குறுந்தொழில் புரிவோர் அனைவருக்கும் 3A2 விகிதப்படி மின்மானியம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும், தொழிற்பயிற்சி மையங்களை மேம்படுத்த ரூ.2877 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழகத்திலிருந்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதிகளை ஊக்கப்படுத்த ரூ.100 கோடி சிறப்பு நீதி ஒதுக்கீடு, சிறு-குறு நிறுவனங்கள் மூலதன முதலீட்டிற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு, கோவையில் கைத்தொழில் மேம்பாட்டுக்குழு அமைக்கப்படுவது, புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படுவது போன்ற அறிவிப்புகளையும் வரவேற்கின்றோம்.
கோவையில் தமிழக அரசின் சார்பில் பம்ப்செட் பரிசோதனைக்கூடம் ஒன்றையும், மூலப்பொருள் வங்கி ஒன்றை ஏற்படுத்தவும் கோப்மா சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.