மேயர், வார்டு உறுப்பினர்கள் என்ற பாகுபாடின்றி உங்களில் ஒருவராகக் கருதி வார்டு பிரச்சனை கூறுங்கள் - மேயர் கல்பனா ஆனந்தகுமார்…!

கோவை ஆனைக்கட்டியில் நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்களுக்கான அறிமுக பயிலரங்கில் மேயர் இவ்வாறு கூறினார்.



கோவை: மேயர், வார்டு உறுப்பினர்கள் என்ற பாகுபாடின்றி உங்களில் ஒருவராகக் கருதி வார்டு பிரச்சனை கூறுங்கள் என மேயர் கல்பனா ஆனந்தகுமார் கருத்து தெரிவித்தார். 

கோவை மாமன்ற உறுப்பினர்களுக்கான அறிமுக பயிலரங்கம் கோவை ஆணைக்கட்டியில் பகுதியில் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் ஆனைக்கட்டியில் நடைபெற்றது. 



இதில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் சர்மிளா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜனகிரகா மையத்தினர் இவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினர்.

பயிலரங்கத்தில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் பேசியதாவது:-







அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். மேயராகிய நானும் ஒரு மாமன்ற உறுப்பினர் என்பதால் என்னை மேயர், மாமன்ற உறுப்பினர் என்ற பாகுபாடின்றி உங்களில் ஒருவராக எண்ணி உங்கள் பகுதி பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், கோவை மாநகரம் வளர்ச்சி பெறவும் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என பேசினார்.

மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:-

கோவை மாநகராட்சி ஆணையாளராக நான் பணியாற்றுவது மிகவும் பெருமையானதாகும். மாநகராட்சியின் அன்றாட பணிகள் என்ன என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அறிந்து கொள்ள வேண்டும். பயிலரங்கில் மிகுந்த ஆர்வமுடன் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளது பாராட்டுக்குரியது. 

ஜனகிரகா அமைப்பினர் சொத்துவரி விதிப்புகள் குறித்து வரி வசூலர்களுக்கு MPL போட்டிகள் நடத்துகின்றன. ஜனகிரகா அமைப்பினர் மத்திய, மாநில அரசுடன் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொள்கிறார்கள். 

மாமன்ற உறுப்பினர்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டம், குடிநீர் விநியோகம் குறித்து சிறுவாணி, பில்லூர் திட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிடலாம். மாநகராட்சி அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பணிநேரத்தில் ஒவ்வொரு ஊழியர்களும் சிறந்த முறையில் பணியாற்றிட வேண்டும். மக்களுக்கு சிறந்த சேவைகளை நீங்கள் உதவிட வேண்டும். 

இந்த பயிலரங்கத்தில் அளிக்கும் பயிற்சியை மாமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தி பயன் பெற வேண்டும். மாமன்றத்தின் அமைப்பு மற்றும் அவற்றின் செயல்பாடுகள், மூத்த மாமன்ற உறுப்பினர்களுடன் குழு விவாதம், துறைத் தலைவர்கள் அறிமுகம், மாமன்ற அமைப்புகள் அதன் செயல்பாடுகள், மாநகராட்சியின் அனைத்து பிரிவுகளின் செயல்பாடுகள், அரசின் முன்னேற்றத் திட்டங்கள், மருத்துவம் மற்றும் சுகாதாரம், குடிநீர், வரிவிதிப்பு, கணக்கு, கல்வி உள்ளிட்டவைகள் செயல்பாடுகள் குறித்து தெரிவித்தார்கள். 

குழு விவாதம் மற்றும் விளக்க காட்சி மாதிரி, வார்டு என்றால் என்ன?, என்னுடைய வார்டுக்கு எவ்வாறு நிதி ஏற்படுத்துவது மற்றும் மாநகரின் பல்வேறு நிதி சார்ந்த திட்டங்கள், மாதிரி மாமன்றம் ஆரம்ப நிலையிலேயே குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது?, பிரபலமாவது எப்படி?, நிறைவு குறிப்புகள் மற்றும் திறந்த விவாதம் உங்களுடைய வார்டை எவ்வாறு மாதிரி வார்டாக மாற்றுவீர்கள்?, மாமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கருத்துகள் கேட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். 

மேலும், கோவை மாநகராட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் திறன்களை வளர்ப்பது நமது மாநகருக்கு முக்கியமானது. கோயம்புத்தூரில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மாமன்றத்தில் கேள்விகள் கேட்பதிலும், தங்கள் பகுதிக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைப்பதிலும், நிறைவேற்றுவதிலும் முனைப்பாக இருக்க வேண்டும். 

ஒவ்வொரு மாமன்ற உறுப்பினரும் அதிகாரம் பெற்ற சிறந்த நபராக சிறப்பாக செயல்பட வேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...