தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2022-23 தொடர்பாக காட்மா சங்கத்தின் வேண்டுகோள்..!

பல திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தும், தொழிற்‌ பேட்டைகள்‌ அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும்‌ என்றும் காட்மா சார்பில் அறிக்கை வெளியீடு.


கோவை: தமிழ்நாடு சட்டப்பேரவையில்‌ தமிழக நிதியமைச்சர்‌ முனைவர்‌ பி.டி.ஆர்‌.பழனிவேல்‌ தியாகராஜன் சமர்ப்பித்த 2022-23ம்‌ நிதியாண்டிற்கான தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை தொடர்பாக காட்மா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து காட்மா சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குறு, சிறு தொழில்‌ முனைவோர்களுக்கு மூலதன மானியமாக 300 கோடி ரூபாய்‌ வழங்கப்படும்‌. மேலும்‌, கடன்‌ உத்திரவாத திட்டத்திற்கு 100 கோடி வழங்கப்படும்‌.

குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ வளர்ச்சிக்கு 911.5 கோடி ரூபாய்‌ வழங்கப்படும்‌, தொழில்துறைக்கு 3261.91 கோடி ஒதுக்கப்படும்.

கோவை உட்பட தமிழக மாவட்டங்களில்‌ தமிழக அரசின்‌ சார்பில்‌ தொழிற்‌ பூங்காக்கள்‌ அமைக்கப்படும்‌ மற்றும்‌ தமிழக தொழிற்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ரூ.2517 கோடி ஒதுக்கப்படும்‌ ஆகிய அறிவிப்புகளை நமது காட்மா சங்கத்தின்‌ சார்பில்‌ வரவேற்கிறோம்‌.

அதே நேரத்தில்‌, தொழிற்‌ பேட்டைகள்‌ அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்திட வேண்டும்‌ என்று நமது காட்மா சங்கத்தின்‌ சார்பில்‌ கேட்டுக்கொள்கிறோம்‌. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...