கோவை கிணத்துக்கடவு அருகே கேரளாவுக்கு காரில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது..!

மேலும், 300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசி கடத்திய உமர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே காரில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை ஆய்வாளர் கோபிநாத் மற்றும் உதவி ஆய்வாளர் தியாகராஜன் உள்ளிட்ட காவலர்கள் நேற்று மாலை கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், வாளையாறு போன்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துகவுண்டனூர் முதுமலை முருகன் கோவில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போலீசார் அதில் 50 கிலோ எடை கொண்ட 6 மூட்டைகளில் 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரை ஓட்டி வந்த கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த உமர் என்பவரைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியதில் கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கி கேரளாவுக்கு கடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, 300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் உமர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...