நீர்நிலை புறம்போக்கு பகுதியில் குடியிருந்த மக்களை அகற்ற முயற்சிக்கும் நடவடிக்கையைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் 3-தலைமுறையாக வசித்து வருபவர்களை நீர்நிலை புறம்போக்கு பகுதியில் இருப்பதாகக் கூறி உடனடியாக காலி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

100-ஆண்டுகளாக ஒரே பகுதியில் குடியிருந்து வரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரம் காக்கும் விதமாக நீர்நிலை புறம்போக்கு பகுதியை நத்தம் புறம்போக்கு என வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.