தமிழக பட்ஜெட் தொழில் முனைவோருக்கு ஏமாற்றம் அளிக்கிறது: 'CIA' ரகுநாதன் தகவல்

தமிழக பட்ஜெட் தொழில்முனைவோருக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது என இந்திய தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்டமைப்பு (CIA) தெரிவித்துள்ளது.


கோவை: தமிழக பட்ஜெட் தொடர்பாக, தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், கே.இ.ரகுநாதன் இந்த பட்ஜெட் தொழில்முனைவோருக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர், கே.இ.ரகுநாதன் கூறியதாவது:-

முதல்வர் 'யூனியன் பட்ஜெட்' போது, அது நலிவுற்ற குறு சிறு நிறுவனங்களை மீட்டெடுக்கவோ, கவனம் செலுத்தவோ இல்லை என்று கூறினார். எனவே இந்த பட்ஜெட் அதை முன்னிறுத்தும் என எதிர்பார்த்தோம். அது நடக்காதது வருத்தம் அளிக்கிறது.

மேலும் மேலும் கடன் வழங்குவது அனைவருக்கும் பொருந்தாது. ஏற்கனவே யூனியன் govt அறிவித்த ECGLS லோன் இன்னும் Rs.2 லட்சம் கோடி உள்ளது. புதிய சிந்தனை அல்லது தீர்வு, நலிவுற்ற தொழில் முனைவோரை மீட்டெடுப்பதில் காணவில்லை.

நிறைய எதிர்பார்த்தோம். புது தொழில் வளர்ப்பு, குழுவாகச் செயல்படும் குறு தொழில் வளர்ப்பு, கட்டமைப்பு உருவாக்கம், நன்கு செயல்படும் தொழில்களுக்கு ஊக்கம், திறன் வளர்ப்பு என்பவை ஏற்கனவே யூனியன் பட்ஜெட்டில் சொல்லப்பட்டவை. ஒருவேளை பிறகு வருமோ?

வருத்தம் தான் மிஞ்சுகிறது. தொழில்கள் வளர்ந்தால் தான் வருமானம் பெருகும் மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படும். தொலை நோக்கு அறிவிப்புகள் மட்டும் போறாது.

சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் சங்கங்களின் பிரதிநிதிகள் தந்த கோரிக்கைகள், அறிவிப்பில் இல்லை. மூல பொருள் விலையேற்றத்திலிருந்து காப்பாற்ற எந்த அறிவிப்பும் இல்லை. வேலை வாய்ப்பு பெறுக எதிர்பார்த்த அறிவிப்பு இல்லை. யூனியன் அரசு அறிவித்த சலுகைகள் கிடைக்க வாய்ப்பில்லாத தொழில் முனைவோருக்கு எந்த சலுகைகளும் இல்லை.

மிக சிறந்த பட்ஜெட் என சொல்ல ஆசை, ஆனால் முடியவில்லை. இன்னும் பல அறிவிப்புகளைச் செய்திருக்கலாம். ஏற்றுமதி நிறுவனங்கள், service sector நிறுவனங்கள், சுய தொழில் செய்பவர்களுக்கு இன்னும் அதிகம் செய்திருக்கலாம். போதாது.

இந்த வருடமும் நிச்சயமில்லா நிலையில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும்.

இவர் அவர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...