குறுந்தொழில் பேட்டை அமைப்பது தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது: 'TANSIA' துணைத் தலைவர் தகவல்..!

தமிழக பட்ஜெட்டில் குறுந்தொழில் பேட்டை அமைப்பது தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக 'TANSIA' தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது.


கோவை: தமிழக பட்ஜெட் தொடர்பாக, தமிழ்நாடு குறு சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பான(TANSIA) துணைத்தலைவர், எஸ்.சுருளிவேல் குறுந்தொழில் பேட்டை அமைப்பது தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு குறு சிறு தொழில் நிறுவனங்களின் அமைப்பான(TANSIA) துணைத்தலைவர், எஸ்.சுருளிவேல் கூறியதாவது:-

தமிழக பட்ஜெட் வரவேற்கத்தக்க அறிவிப்புகள்:

1. ரூ.300 கோடி முதலீட்டு மானியம்.

2. 2030-ம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் என்ற இலக்கை அடையும் வகையில், புதிய கட்டமைப்புகளை உருவாக்க 100 கோடி ரூபாய் சிறப்பு நிதி.

3.தமிழகம் முழுக்க தொழில் வளர்ச்சியைப் பரவலாக்கும் வகையில், மதுரை, திருவள்ளூர், கோவை, பெரம்பலூர், வேலூர் ஆகிய 5-மாவட்டங்களில் புதிய தொழில்பூங்காங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 50,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு ஈர்க்கப்படும்.

4. 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், அந்நிறுவனங்களின் பொருள்களை 50- லட்சம் ரூபாய் அளவில் தமிழக அரசு துறைகள் கொள்முதல் செய்ய அறிவுறுத்தத் திட்டம்.

5. TIIC மூலம் சிறு குறு தொழில்களுக்குப் பிணையில்லா கடன் வழங்கும் திட்டம். இதற்குத் தமிழக அரசு 100 கோடி ரூபாய் உத்தரவாதம்.

ஏமாற்றம் அளிப்பவை:

1. குறுந்தொழில் பேட்டை அமைப்பது குறித்து அறிவிப்பு ஏதுமில்லாதது.

2. குறுந்தொழில்களுக்குத் தனி கடன் திட்டம் ஏதுமில்லாதது.

3. குறுந்தொழில்களுக்கு மின் கட்டண சலுகை ஏதும் அறிவிக்காதது.

3. பின்வரும் காலங்களில் வேளாண் துறைக்குத் தனி பட்ஜெட் போன்று தொழில் துறைக்கும் தனி பட்ஜெட் வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...