கோவையில் ஊட்டச்சத்து மிக்க 'சிறு தானிய பயிர் ஊக்குவிக்க வாகன பிரச்சாரம்' - நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியுடன் துவங்கம்…!

ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கிராமம் தோறும் தமிழ்நாடு வேளாண்மைத் துறை சார்பில் மேற்கொள்ள வாகனம் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.



கோவை:கோவை மாவட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கிராமம் தோறும் தமிழ்நாடு வேளாண்மைத் துறை சார்பில் மேற்கொள்ள வாகனம் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவங்கி வைத்தார்.



இந்திய அளவில் தானியங்களில் நெல், கோதுமைக்கு அடுத்த படியாக சோளம், கம்பு இராகி, குதிரைவலி, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடப்படுகிறது. தற்போது 2022-ம் ஆண்டினை "சிறுதானியங்கள் ஆண்டு" ஆக அறிவித்து சிறுதானியங்கள் உற்பத்தியைச் சிறு மற்றும் குறு விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்ய பல்வேறு தொழில் நுட்பங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

சிறுதானியங்களின் சாகுபடி மானாவாரி விவசாயத்தின் முதுகெலும்பாக உள்ளது. தமிழ் நாட்டில் சோளம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகமாக இறவை மற்றும் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது. மேலும் சிறுதானியங்களின் பயிரின் பரப்பினை அதிகரிக்க விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் போன்றவைகள் மானிய விலையிலும், கை தெளிப்பான், பயிர் பாதுகாப்பு மற்றும் களைக் கொல்லி மருந்துகள் பின்னேற்ப்பு மானியமாகவும், விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கிலோவிற்கு ரூ.30/ விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.



வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் தொண்டாமுத்தூர், மதுக்கரை, சர்கார்சாமகுளம், பெரியநாயக்கன்பாளையம், சூலூர், அன்னூர் வட்டாரங்களில் சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார ஊர்தியினை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் .ஜி.எஸ்.சமீரன் தலைமையில் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.

உடன் வேளாண்மை இணை இயக்குநர் சித்ரா தேவி, வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்செல்வி, வேளாண்மை துணை இயக்குநர் கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...