பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் வனப்பகுதியில், ஆண் யானையுடன் ஏற்பட்ட சண்டையில் 20-வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்தது.
கோவை: வனப்பகுதியில் ஆண் யானையுடன் ஏற்பட்ட சண்டையில் 20-வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்தது.
ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட வரகளியாறு வனப்பகுதியில், நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது உடல் மெலிந்த நிலையில் பெண் யானை ஒன்று நின்றதை கண்டு அதனைக் கண்காணித்து வந்தனர்.

பல மணி நேரமாக அங்கிருந்து செல்ல முடியாமல் தவித்து வந்த யானை குறித்து வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது.
ஆனால் யானை திடீரென மயங்கி விழுந்தது. பின்னர் யானையை அருகில் சென்று பார்த்தபோது, ஆண் யானையுடன் ஏற்பட்ட சண்டையில், ஆண் யானை தந்தத்தால், பல இடங்களில் குத்திய காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த யானைக்கு இன்று வனத்துறை மருத்துவக் குழு மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.