கோவையில் மகளிர் மேம்பாட்டிற்காக இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி – துணை மேயர் பங்கேற்பு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளை சார்பில் ஆதரவற்ற, ஏழைப் பெண்களுக்கு ‘இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி’கரும்புக்கடை ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



கோவை: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளை சார்பில் ஆதரவற்ற, ஏழைப் பெண்களுக்கு ‘இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மகளிர் மேம்பாட்டிற்காக இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி துணை மேயர் மற்றும்ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளை சார்பில் ஆதரவற்ற, ஏழைப் பெண்களுக்கு ‘இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி’ நேற்று (வியாழன்) மாலை 5 மணிக்கு கரும்புக்கடை ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இதில், ஜமாஅத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜனாப். P.S. உமர் ஃபாரூக் துவக்கவுரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் துணை மேயர் வெற்றிச் செல்வன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியதுடன் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களையும் வழங்கினார்.



மேலும் 86-ஆம் வார்டு மாமன்ற உறுப்பினர் அஹமத் கபீர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ மற்றும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.



இந்நிகழ்வில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ஜனாப். K.ஜலாலுதீன், மக்கள் சேவைத்துறை செயலாளர் ஜனாப். I. ஜலாலுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



மகளிர் மேம்பாடு மற்றும் சுயமுன்னேற்றத்திற்கான இதுபோன்ற மக்கள் சேவைப் பணிகளை அனைத்து தரப்பினருடனும் இணைந்து சிறப்பான தாக்கம் ஏற்படுத்திடும் வகையில் பணியாற்ற ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் என இந்நிகழ்வு வலியுறுத்தியது.



Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...