கோவையில் மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம்: சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்.பி சுழற்கோப்பை வழங்கி பாராட்டு.!!

கோவையில் இன்று மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த குற்ற விவாதிப்பு கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்குக் சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி எஸ்.பி. செல்வநாகரத்தினம் பாராட்டு தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று (17.03.2022) நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



சிறப்பாக பணிபுரிந்த மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், சிறப்பாக பணிபுரிந்த காரமடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முனிசாமி நிலைய பதிவேடுகளைச் சிறப்பான முறையில் பராமரித்த காவல் நிலைய தலைமை காவலர்(HC:1231) குமரவேல், சிறந்த முறையில் CCTNSல் கோப்புகளை பதிவேற்றம் செய்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவலர்(PC:1779) சுரேஷ்குமார், சிறப்பான முறையில் வழக்கினை கோப்பிற்கு எடுத்து திறம்பட செயல்பட்ட மேட்டுப்பாளையம் காவல் நிலைய நீதிமன்ற காவலர்(PC-755) தாமோதரன் பெண்கள் உதவி மையத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் (WHC:1446) சுனிதா மாவட்டத்தில் காணாமல் போன நபர்களை அதிக அளவில் கண்டுபிடித்த துடியலூர் காவல் நிலைய தலைமைக் காவலர்(HC:1176) ராமராஜ் ஆகியோர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்களையும், சிறந்த காவல் நிலையமாக மேட்டுப்பாளையம் காவல் நிலையம் தேர்வு செய்து அதற்கான சுழற்கோப்பையை மேட்டுப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகத்திற்கு கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் வழங்கி கௌரவப் படுத்தினார்.



ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற சிறந்த செயல்பாடுகள் குறித்து பரிசீலனை செய்து சுழற்கோப்பை வழங்கப்படும் என்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இப்புதிய அணுகுமுறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோன்ற பாராட்டுக்கள் காவல்துறையினர் திறம்படச் செயல்படுவதற்கு ஊக்குவிப்பாக அமைகிறது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...