22-வது வார்டு 'கிளீன் அண்ட் கிரீனாக மாற்றப்படும்': கவுன்சிலர் கோவை பாபு நம்பிக்கை..!

சேரன் மாநகர் உள்ளிட்ட 22-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் 'கிளீன் அண்ட் கிரீனாக மாற்றப்படும்' என, மாநகராட்சி கவுன்சிலர் கோவை பாபு தெரிவித்துள்ளார்.


சேரன் மாநகர் உள்ளிட்ட 22-வது வார்டுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் பசுமை நிறைந்த பகுதியாக மாற்றப்படும் என, மாநகராட்சி கவுன்சிலர் கோவை பாபு தெரிவித்தார்.

'சிம்பிளிசிட்டி' நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-



திமுக அரசின் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எனக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை ஒருபோதும் வீண் போகாது. மாநகராட்சி 22-வது வார்டு பகுதி எதிர்வரும் ஆண்டுகளில் மற்ற அனைத்து வார்டுகளையும் விட முன்னோடி வார்டாக செயல்படும்.

தேர்தல் வாக்குறுதியின் போது 100 சதவீதம் தூய்மை மற்றும் 100 சதவீதம் பசுமை (Clean, Green) என்ற முழக்கத்தை முன்வைத்தேன்.



அதன்படி நான் வெற்றி பெற்றதுமே முதல் பணியாக நகரைத் தூய்மைப்படுத்திடும் தூய்மைப் பணியாளர்களிடம் முதல் சந்திப்பு நடத்தி குப்பை மேலாண்மையைப் பற்றி விளக்கினேன். அவர்கள் ஒத்துழைப்பு நல்கிடவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் புரிந்திடவும் உறுதி அளித்தேன்.

தற்பொழுது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலை பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றன. பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாகத் தீர்வு காணும் வாகையில் அது சம்பந்தப்பட்ட துறைவாரியான அதிகாரிகளுடனும் பேசி வருகிறேன்.

கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனை ஏற்படாமல் இருக்க வரும் சனிக்கிழமை மாநகராட்சி, குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளுடன் இணைந்து கள ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம்.

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் இந்த வார்டுக்கு வினியோகிக்க வழங்கப்படும் குடிநீர் சீரான முறையில் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்படும். எந்த இடத்தில் தவறு உள்ளது என்பதைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களும் தங்களுக்கு உள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். சாலையோரம் மற்றும் காலி இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.



குப்பை அள்ளுதல் மற்றும் குப்பை கொட்டுவதற்கு இடவசதி இல்லாதது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து எனது கவனத்திற்குக் கொண்டு வரலாம்.

அதற்காக வார்டில் ஏற்படும் குறைகளை சொல்லிடவும், கோரிக்கைகளை வலியுறுத்திடவும் பொது எண்கள் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

அந்த எண்ணிற்கு எந்நேரமும் அழைத்து மக்கள் தங்களது குறைகளைச் சொல்லலாம். அதேபோல், 24/7 எல்லா நேரமும் செயல்படும் kovaiw22 என்ற செயலியையும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்களால் தேர்தல் பரப்புரையில் அறிமுகப்படுத்தினோம். அந்த செயலியிலும் மக்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிடலாம்.

உடனடியாக அதற்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு மக்கள் நலத்திட்டங்களையும் எனது வார்டிற்கு கொண்டு சேர்ப்பேன். இளைஞர் - மாணவர் - மக்கள் பயன்படும் வகையில் ஓர் மக்கள் தொண்டனாய் பணியாற்றுவேன்.

இவ்வாறு, மாநகராட்சி கவுன்சிலர் கோவை பாபு தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...