'வங்கியில் அடகு வைத்த நகைகளில் கைவரிசை': பல்லடம் எஸ்.பி.ஐ வங்கியில் நகையை நூதனமாக திருடிய நகை மதிப்பீட்டாளர் கைது.!!

திருடப்பட்ட நகைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வங்கியின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் அடகு வைத்த நகையை நூதனமாக திருடிய நகை மதிப்பீட்டாளர் சேகரிடம் பொதுமக்கள் விசாரித்த போது திருடியதை ஒப்பு கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் எஸ்.பி.ஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராகச் சுதா என்பவரும் நகை மதிப்பீட்டாளராக சேகர் என்பவரும் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த வங்கியில் கேத்தனூர், மந்திரிபாளையம், ஜல்லிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகளைத் தொடங்கி வாடிக்கையாளராக உள்ளனர்.

விவசாயிகள் அவசர தேவைக்காக தங்கள் நகைகளை இங்கு அடமானம் வைப்பது வழக்கம். அவ்வாறு நகைகளை அடமானம் வைக்கும் பொழுது நகை மதிப்பீட்டாளர் சேகர் சிட்டா, மற்றும் ஆதார் கார்டின் நகல் வழங்கினால் குறைந்த வட்டியில் நகை கடன் கிடைக்கும் என கூறியதை நம்பிய விவசாயிகள் அவரிடம் நகையை குடுத்து விட்டு சென்று விடுவார்கள்.

தொடர்ச்சியாக இது நடைபெற்று வந்த சூழ்நிலையில் அடகு நகையை மீட்ட சிலர் நகையின் அளவுகள் மாறி உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



நகையின் எடையைப் பரிசோதனை செய்ததில் வாங்கும் போது இருந்த நகையின் எடையும் அடகு வைத்து மீட்கப்பட்ட பின் இருந்த நகையின் எடையும் வித்தியாசம் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் சில நாட்களுக்கு முன்பு வங்கியை முற்றுகையிட்டு வங்கி மேலாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த நகை மதிப்பீட்டாளர் சேகரிடம் பொதுமக்கள் விசாரித்த போது தவற்றை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த தகவல் தீயாகப் பரவியதை அடுத்து நகை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் தொடர்ந்து புகார் அளித்த நிலையில் வங்கி நிர்வாகத்தின் சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் வாடிக்கையாளர்கள் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நகை மதிப்பீட்டாளர் சேகரைக் கைது செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என புகார் அளித்தனர்.



புகாரின் அடிப்படையில் வங்கி நகை மதிப்பீட்டாளர் சேகரை இன்று போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் வங்கியில் நகையை அடமானம் வைத்த விவசாயிகள் திருடப்பட்ட நகைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வருவாய்த் துறையினர் முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வங்கியின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் அறிந்து அங்கு வந்த பல்லடம் தாசில்தார் நந்த கோபாலன் மற்றும் சூலூர் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் கந்தசாமி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.



சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி இது குறித்து நாளை சட்டசபையில் தமிழக முதல்வரிடமும், நிதித்துறை அமைச்சரிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...