கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு மாடு - உடற்கூறு ஆய்விற்கு பின் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது…!

மாட்டின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வனப்பகுதியில் ஆழமான குழி தோண்டி காட்டுமாடு புதைக்கப்பட்டது.


கோவை: கோவை வனப்பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு மாடு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் வனப்பகுதியில், நேற்று மாலை வனக்காப்பாளர், மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியில் ஒரு பெண் காட்டு மாடு இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாடு உயிரழப்பு குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இரவு நேரம் ஆனதால் வனவிலங்கு அச்சுறுத்தல் இருக்கும் என்பதால், இன்று மீண்டும் அங்குச் சென்ற வனத்துறையினர் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் முன்னிலையில், முதுமலை வன கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையில் இறந்த காட்டு மாட்டிற்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது காட்டு மாட்டின் பின்னங்கால்கள் இரண்டிலும் காயங்கள் ஏற்பட்டு, இதனால் நீண்டதூரம் காட்டுமாடு மேய்ச்சலுக்காக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போதிய உணவு எடுக்காமல் மாடு இறந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும், மாட்டின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வனப்பகுதியில் ஆழமான குழி தோண்டி காட்டுமாடு புதைக்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...