கிணத்துக்கடவில் 'பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி' செலுத்தும் பணி தீவிரம்.!!

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-முதல் 14-வயதுள்ள மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


கோவை: கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 12-முதல் 14-வயதுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா தொற்றிருந்து தற்காத்துக்கொள்ள மத்திய அரசு சார்பில் 18-வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 12-வயது முதல் 14-வயது உள்ள சிறார்களுக்கு நேற்று புதன்கிழமை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது.



அதன்படி இன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-முதல் 14-வயதுள்ள மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா மேற்பார்வையில் மாணவ, மாணவிகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.

மாணவர்களும் வரிசையாக வந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கிணத்துக்கடவு வட்டாரப் பகுதிகளில் நாள்தோறும் 12-முதல் 14-வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...