பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியில் அடகு வைத்த நகைகளில் சிறு சிறு பகுதிகளை திருடிய நகை மதிப்பீட்டாளர் கைது..!

புகாரின் பேரில், வங்கி நகை மதிப்பீட்டாளர் சேகரை இன்று போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியில் அடகு வைத்த நகைகளில் சிறு சிறு பகுதிகளை திருடிய நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கேத்தனூரில் எஸ்.பி.ஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக சுதா என்பவரும், நகை மதிப்பீட்டாளராக சேகர் என்பவரும் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த வங்கியில் கேத்தனூர், மந்திரிபாளையம், ஜல்லிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கணக்குகளைத் தொடங்கி வாடிக்கையாளராக உள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகள் அவசர தேவைக்காக தங்கள் நகைகளை இங்கு அடமானம் வைப்பது வழக்கம். அவ்வாறு நகைகளை அடமானம் வைக்கும் பொழுது நகை மதிப்பீட்டாளர் சேகர் சிட்டா மற்றும் ஆதார் கார்டின் நகல் வழங்கினால் குறைந்த வட்டியில் நகைக் கடன் கிடைக்கும் என கூறியதை நம்பிய விவசாயிகள் அவரிடம் நகையை குடுத்து விட்டு சென்று விடுவார்கள்.



தொடர்ச்சியாக இது நடைபெற்று வந்த சூழ்நிலையில், அடகு நகையை மீட்ட சிலர் நகையின் அளவுகள் மாறி உள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நகையின் எடையை பரிசோதனை செய்ததில் வாங்கும் போது இருந்த நகையின் எடையும், அடகு வைத்து மீட்கப்பட்ட பின் இருந்த நகையின் எடையும் வித்தியாசம் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் சில நாட்களுக்கு முன்பு வங்கியை முற்றுகையிட்டு வங்கி மேலாளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த நகை மதிப்பீட்டாளர் சேகரிடம் பொதுமக்கள் விசாரித்த போது தவறை ஒப்புக் கொண்டுள்ளார். இந்த தகவல் தீயாக பரவியதை அடுத்து நகை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் தொடர்ந்து புகார் அளித்த நிலையில் வங்கி நிர்வாகத்தின் சார்பில் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, காமநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் வாடிக்கையாளர்கள் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நகை மதிப்பீட்டாளர் சேகரை கைது செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், வங்கி நகை மதிப்பீட்டாளர் சேகரை இன்று போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...