ஹிஜாப் தீர்ப்பு எதிரொலி: 'கர்நாடக உயர்நீதிமன்றமே காவிகளுக்கு அடிபணியாதே'-என கோஷமிட்டவாறு கோவையில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்.!!

கர்நாடக உயர்நீதிமன்றமே காவிகளுக்கு அடிபணியாதே, முஸ்லீம் விரோத போக்கோடு செயல்படாதே, என கோஷமிட்டவாறு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: ஹிஜாப் தீர்ப்பு விவகாரம் தொடர்பாக, அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வி கூடங்களில் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்தது செல்லும் எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.



இந்நிலையில் அதனைக் கண்டித்து கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை நிராகரிக்கிறோம், கர்நாடக உயர்நீதிமன்றமே காவிகளுக்கு அடிபணியாதே, முஸ்லீம் விரோத போக்கோடு செயல்படாதே, ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை என்ற பதாகைகளை ஏந்தி பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் யை கண்டித்தும் கர்நாடக உயர்நீதிமன்றத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.



கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பைத் திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...