'அடுத்தடுத்து இறக்கும் யானைகள்'- கோவை மாங்கரை வனப்பகுதியில் இறந்த ஆண் யானை உடல் கண்டுபிடிப்பு…!

மருத்துவ குழுவினர் இறந்த யானைக்கு உடற்கூறு ஆய்வு செய்யும் பணிகளை தொடங்கி உள்ளனர். யானையின் உடல் பாக மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.


கோவை: கோவை மாங்கரை வனப்பகுதியில் இறந்த ஆண் யானை உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மாங்கரை வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது ஆனைக்கட்டி மாங்கரை, சலீம் அலி பறவைகள் சரணாலயம் அருகே உள்ள வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்த நிலையிலிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அங்குச் சென்ற கால்நடை மருத்துவர்கள் குழு யானை உயிரிழப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக உயிரிழந்த யானைக்கு சுமார் 30-வயது இருக்கலாம் என்றும், உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது மருத்துவ குழுவினர் இறந்த யானைக்கு உடல் கூறு ஆய்வு செய்யும் பணிகளைத் துவங்கி உள்ளனர். யானையின் உடல் பாக மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...