கோவையில் அரசு பேருந்தில் பெண் பயணிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த பேருந்து நடத்துனர் கைது..!

புகாரின் பேரில், இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்து நடத்துனர் பூவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையில் அரசு பேருந்தில் பெண் பயணியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பேருந்து நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ் கோச்சிங் செண்டரில் படித்து வருகிறார். நேற்று சொந்த ஊரில் இருந்து கோவைக்கு பேருந்தில் வந்துள்ளார்.

இந்நிலையில், சேலத்தில் இருந்து கோவைக்கு TN 33 N 3298 நம்பருடைய அரசு பேருந்தில் நேற்று மாலை வந்துள்ளார். பேருந்தில் அந்த பெண்ணிடம் நடத்துனர் பூவேந்திரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, பேருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் வந்ததும், பாதிக்கப்பட்ட பெண் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்து நடத்துனர் பூவேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...