கோவையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட ஒரு நாள் பயிற்சி..!

வெரைட்டிஹால் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற பயிற்சியை மேயர் கல்பனா ஆனந்தகுமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.



கோவை: கோவையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சி வெரைட்டிஹால் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.



இதனை கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.



மேலும் அங்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் பொருட்களை பார்வையிட்டார்.



இந்நிகழ்வில் சமூக நலத்துறை, குழந்தைகள் துறை அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்திமதி அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதில் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு எவ்வகை உணவுகள் வழங்கப்படுகிறது, குழந்தைகளுக்கு எவ்வாறு பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.



மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களின் தேவைகள் குறித்தும், அங்கன்வாடி மையங்களை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது, குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 18 வட்டாரங்களில் 1697 அங்கன்வாடிகளும், 35,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...