மேலும், சைபர் கிரைம் குறித்து புகாரளிக்க 1390 என்ற இலவச தேசிய உதவி எண்ணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வெளியிட்டார்.
கோவை: பண மோசடி நடந்தால் உடனடியாக சைபர் கிரைம் கட்டுப்பாடு அறைக்கு அழைத்தால் பணத்தை மீட்க முடியும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
சைபர் கிரைம் குறித்து புகாரளிக்க 1390 என்ற இலவச தேசிய உதவி எண்ணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வெளியிட்டார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் கூறும் போது:-
கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 21 அன்று சைபர் கிரைம் காவல் நிலையம் துவங்கியது.
இந்த அலுவலகத்தில் நேஷனல் சைபர் க்ரைம் ரிப்போர்ட் போஸ்டல் மூலமாகவும் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பண மோசடி தொடர்பாக 2021ம் வருடம் 21 வழக்கும், 2022ம் ஆண்டு 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை ரூ.18.57 லட்சம் பணம் கைப்பற்றப்பட்ட பாதிக்கப்பட்டவருக்கு திரும்ப கொடுக்கப்பட்டு உள்ளது.
பண மோசடி சம்பந்தமான புகார்களில் ரூ.40.81 லட்சம் பணம் முடக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக இதுவரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மூன்று நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணமோசடி குற்றங்களைத் தடுக்க 1930 என்ற கட்டணமில்லா புகார் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டால் உடனடியாக இந்த தொலைபேசி எண்ணில் புகார் அளித்தால் உடனடியாக இழந்த பணத்தை மீட்க முடியும் என தெரிவித்தார்.
இணையதள குற்றங்கள் அதிகமாக தற்பொழுது வருகின்றது. படித்தவர்களால் அதிக அளவு வங்கியில் இருந்து பேசுகிறேன், கஸ்டமர் கேரில் இருந்து பேசுகிறேன், என அதிக அளவிலான சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது.
தற்பொழுது, புறநகர் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 74 வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. பதியப்பட்ட வழக்குகள் எந்தெந்த பிரிவின் கீழ் வருகிறது என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.