கோவை சிறுவாணி சாலையில் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்த குட்டியானை…!

வழக்கமாக இரவு நேரங்களில் மட்டுமே அங்கு சாலைகளை கடக்கும் யானைகள், கோடைகாலம் என்பதால் தண்ணீர் தேடி வரத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.



கோவை: கோவை சிறுவாணி சாலையில் சென்ற அரசுப் பேருந்தை குட்டியானை வழிமறித்து விரட்டியுள்ளது.

கோவை சிறுவாணி சாலையில் உள்ள சாடிவயல் பகுதியில் 5 மலை கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று மாலை சாடிவயல் பகுதியிலிருந்து வெள்ளப்பதி நோக்கி அரசுப் பேருந்து சென்றுள்ளது. அப்போது திடீரென வனப்பகுதிக்குள் இருந்துவந்த குட்டியானை ஒன்று பேருந்தை வழிமறித்து விரட்டியது.



இதனால் பேருந்து பின்னால் நோக்கி சென்றுள்ளது. இந்த காட்சிகளை பேருந்தில் இருந்த நபர் ஒருவர் பதிவுசெய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வழக்கமாக இரவு நேரங்களில் மட்டுமே அங்கு சாலைகளை கடக்கும் யானைகள், கோடைகாலம் என்பதால் தண்ணீர் தேடி வரத் துவங்கியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...