ராணுவ பணியின் போது உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு கோவை ஆயுதப்படை காவலர்கள் சேர்ந்து நிதியுதவி..!

உதவும் கரங்கள் என்ற குழு அமைத்து அதன் மூலம் கிடைத்த தொகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம் வீதம் 2 லட்சம் உதவித் தொகையானது வழங்கப்பட்டுள்ளது.


கோவை: ராணுவ பணியின் போது உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்தினருக்கு கோவை ஆயுதப்படை காவலர்கள் சேர்ந்து நிதியுதவி அளித்தனர்.

கோவை மாவட்ட ஆயுதப் படையில் முதல்நிலை காவலராக பணிபுரிபவர் பாபு. சமூக ஆர்வலரான இவர் தன்னுடன் பணிபுரியும் சக காவலர்களிடம் பணம் வசூல் செய்து காவலர்களின் குடும்பம் மற்றும் ஏழை, எளியோருக்கு அவ்வப்போது உதவி செய்து வருகின்றார்.

முக்கியமாக, காவல் துறை மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் போது உயிா் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக, நண்பர்கள் மற்றும் சக காவலர்களை ஒருங்கிணைத்து உதவும் கரங்கள் என்ற குழு அமைத்து அதன் மூலமாக உதவிகள் செய்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இராணுவத்தில் பணியாற்றி வந்த தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி என்ற வீரர் விபத்தில் உயிரிழந்தார்.

இதே போல, எல்லை பாதுகாப்பு படையில் வேலை பார்த்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில், ஆயுதப்படை காவலரான பாபு உயிரிழந்த இரு வீரர்களின் குடும்பத்திற்காக சக காவலர்கள் மற்றும் நண்பர்களிடம் நன்கொடை வசூல் செய்தார்.

இரண்டு லட்சம் ரூபாய் நிதி திரட்டிய நிலையில், இன்று கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் சார்பாக இரு குடும்பத்தினரிடமும் நிதி உதவியினை காவலர் பாபு வழங்கினார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 1 லட்சம் வீதம் உதவித் தொகையானது வழங்கப்பட்டது.



இதுவரை ராணுவ வீரர் அல்லது காவல்துறையினர் உயிர் இழந்தால் சம்பந்தப்பட்ட துறையினர் மட்டுமே நிதி திரட்டி வழங்கி வந்த நிலையில்,

ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் வீரர்களுக்காக கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் இணைந்து உதவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோவை ஆயுதப்படை காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் இணைந்து மனிதநேயத்துடன் நாட்டுக்காக உயிர் இழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...