நீலகிரி பந்தலூர் அருகே புலி நடமாட்டத்தால் அச்சம் - வனத்துறையினர் கேமரா பொருத்திக் கண்காணிப்பு..!

மேலும், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கியில் வனத்துறையினர் எச்சரிக்கை.


கோவை: நீலகிரி பந்தலூர் அருகே கிராமப் பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதால், வனத்துறையினர் கேமரா பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட சூசம்பாடி கிராமத்தை ஒட்டிய புதரில், சில வாரங்களுக்கு முன் இரண்டு பசு மாடுகளை ஒரே நாளில் புலி தாக்கிக் கொன்றது.

நேற்று முன்தினம் இரவு நேரத்தில், குடியிருப்புகளை ஒட்டிய பகுதியில் புலி வந்து செல்வதை மக்கள் பார்த்துள்ளனர். அங்கு நான்கு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, வனத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கியில் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...