கோவை நரசிபுரம் வனப்பகுதியில் இறந்த பெண் யானையின் மண்டை ஓடு, எழும்புகள் கண்டுபிடிப்பு - வனத்துறை தீவிர விசாரணை

நரசிபுரம் வனப்பகுதியில் வனச்சரகர் சரவணன் தலைமையில் ரோந்து பணி மேற்கொண்ட போது, இறந்த யானையின் மட்டை ஓடு, மற்றும் எழும்புகள் இருந்தது தெரியவந்தது.



கோவை போலுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நரசிபுரம் வனப்பகுதியில் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.



அப்போது, கடுக்காய்பாறை அருகே சென்ற போது இறந்த யானையின் மட்டை ஓடு, மற்றும் எழும்புகள் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த முதுமலை வன கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். அதில், கண்டெடுக்கப்பட்ட இரண்டு கோரை பற்களை மண்டை ஓடு எழும்புடன் பொருத்தி பார்த்து ஆய்வு செய்ததில், இறந்தது சுமார் 7 வயது மதிக்கத்தக்க பெண் யாணை என்பது கண்டறியபட்டது. 

இதையடுத்து, அங்கிருந்த எழும்புகள் மரபனு சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...