ஹிஜாப் தீர்ப்பு எதிரொலி: 'நான் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி' என கோஷமிட்டவாறு திருப்பூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்.!!

ஹிஜாப் தடைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய தமுமுக-வினர் நீதிபதி வேடமணிந்து காவி துண்டு அணிந்து நான் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி என கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதற்குத் தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் தீர்ப்பு நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கர்நாடகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் உடை அணிந்து செல்ல இஸ்லாமிய மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக அரசின் தடை உத்தரவு செல்லும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஹிஜாப் தடைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள் நீதிபதிகள் ஆர்எஸ்எஸ் காரர்கள் போல செயல்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் நீதிபதி வேடமணிந்து காவி துண்டு அணிந்து நான் ஆர்எஸ்எஸ் கைக்கூலி என கோஷமிட்டவாறு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக ஹிஜாப் உடை எதிரான தீர்ப்பு நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...