'ஆன்லைனில் இப்படியும் ஒரு நூதன மோசடி'- கோவையில் ஐ.டி.பணியாளரிடம் உதிரிப்பாகங்கள் தருவதாக கூறி ரூ.1.25-லட்சம் மோசடி.!!

பெண் ஐ.டி.பணியாளரிடம் கணினி உதிரிப்பாகங்கள் தருவதாக கூறி ரூ.1.25-லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: பெண் ஐ.டி.பணியாளரிடம் ரூ.1.25-லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை செட்டிபாளையம் ரோடு வெள்ளலூரைச் சேர்ந்தவர் வாணி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இணையதளத்தில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் வாங்குவதற்காகத் தேடினார்.

அப்போது தனியார் நிறுவன பெயரில் பதிவிடப்பட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய நபர்கள் உதிரிப்பாகங்களுக்கான தொகை ரூபாய் 1.25-லட்சத்தைச் செலுத்தினால் உதிரிப்பாகங்கள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வாணி இரண்டு கட்டங்களாக வங்கி பரிவர்த்தனை மூலமாக ரூபாய் 1.25-லட்சம் அனுப்பி வைத்தார். பிறகு உதிரிப்பாகம் வந்து சேரவில்லை. மீண்டும் அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாணி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...