பெரும்பாலான இந்து மக்கள் கொண்டாடும் பங்குனி உத்திர நாளன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்தது போல், அனைத்து மாவட்டங்களிலும் பொது விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை.
கோவை: அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திர நாளை, பங்குனி உத்திரமாக கொண்டாடுவர். முருகப் பெருமானுக்கு சிறப்பு மிகுந்த விரத நாளாக கருதப்படும் நாளில், சிறப்பு அபிஷேக, அலங்கார, பூஜைகள் நடத்தப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு பங்குனி 4ம் தேதி (மார்ச் 18) வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 1.20 மணிக்கு உத்திர நட்சத்திரம் மறுநாள் அதிகாலை 1.20 வரை பங்குனி உத்திரம் கடைபிடிக்கப்படும்.
இந்த நிலையில், பெரும்பாலான இந்து மக்கள் கொண்டாடும் பங்குனி உத்திர நாளன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர், காடேஸ்வரா சுப்பிரமணியம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பங்குனி உத்திரம் என்பது இந்துக்களின் மிகப்பெரும் ஆன்மீகத் திருவிழா ஆகும். இந்த நன்னாளில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். அதற்காக அவருக்கு இந்து முன்னணி பேரியக்கம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
பங்குனி உத்திரத் திருநாளில் தான் குன்றிருக்கும் இடமெல்லாம் இருக்கும் முருகன்-தெய்வானை திருமணம், ஸ்ரீராமர்-சீதை திருமணம், மதுரை சுந்தரேஸ்வர்- மீனாட்சி திருமணம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்- இரங்கமன்னார் திருமணம், கலியுக வரதன் ஸ்ரீஐயப்பன் அவதார நாள், பஞ்ச பாண்டவர்களில் அர்ஜூனன் பிறந்தது போன்ற விசேஷங்கள் நடைபெறும்.

இந்த நன்னாளான அன்று தமிழகம் முழுவதுமே இந்துக்கள் விமர்சையாக கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறது. எனவே, பெரும்பான்மையான மக்களின் வழிபாட்டுக்குரிய திருவிழாவான பங்குனி உத்திரத்தை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அவர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.