'பாரா ஒலிம்பிக் போட்டி'- வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் பாராட்டு.!!

இதில் இரு கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி சிறுவன் நிர்மல்குமார் கைகள் இல்லையென்றாலும் நன்கு எழுத வரும் என தெரிவித்ததையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அவர் பேனாவை அன்பளிப்பாக அளித்தார்.


கோவை: சென்னையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கோவை மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

மாற்றுத் திறனாளிகளுக்காக, மாநில அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி முதல் மார்ச் 6-ஆம் தேதி வரை சென்னையில், நடைபெற்றது. இப்போட்டிகளில் கோவையிலிருந்து 52க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களில் 18 நபர்கள் வெற்றி பெற்று பதக்கம், மற்றும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றனர். இதில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 8 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், பளுதூக்குதல், நீச்சல் போட்டிகள், போன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர்.



அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் வாழ்த்துக்களையும் பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் மாற்றுத் திறனாளிகள் மேலும் வெற்றிபெற என்னென்ன தேவையோ, அனைத்தையும் வழங்கக் கோவை மாவட்ட நிர்வாகம் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.



இதில் இரு கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி சிறுவன் நிர்மல்குமார் கைகள் இல்லையென்றாலும் நன்கு எழுத வரும் என தெரிவித்ததையடுத்து அவரது பேனாவையே அன்பளிப்பாக அளித்தார்.



அதில் அம்மாணவன் அவனது பெயரை மாவட்ட ஆட்சியரிடம் எழுதிக் காண்பித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...