'நதிகளை மீட்போம்'‌ இயக்கத்தின்‌ பரிந்துரையின்படி 13-நதிகளுக்குப் புத்துயிரூட்ட மத்திய அரசு திட்டம்‌.!!

இந்தியாவில்‌ உள்ள 13-நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதை வரவேற்று சத்குரு டிவிட்டரில்‌ வாழ்த்து தெரிவித்து இருந்தார்‌.


கோவை: சத்குருவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர்‌ சத்குரு தொடங்கிய நதிகளை மீட்போம்‌ இயக்கத்தின்‌ பரிந்துரைகளின்‌ அடிப்படையில்‌, இந்தியாவில்‌ உள்ள 13 நதிகளுக்கு புத்துயிரூட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை மத்திய அரசு (மார்ச்‌ 15) வெளியிட்டுள்ளது.



இதை வரவேற்று சத்குரு டிவிட்டரில்‌ நேற்று வாழ்த்து தெரிவித்து இருந்தார்‌. அதற்கு நன்றி தெரிவிக்கும்‌ விதமாக, மத்திய ஜல்‌ சக்தி துறை அமைச்சர்‌ கஜேந்தர சிங்‌ ஷெகாவத்‌ வெளியிட்டுள்ள டிவிட்டர்‌ பதிவில்‌, “நன்றி சத்குரு. விரிவான திட்ட அறிக்கைகளில்‌ கூறப்பட்டுள்ள பரிந்துரைகள்‌, நதிகளை மீட்போம்‌ இயக்கத்தின்‌ பரிந்துரைகளை ஒத்து (இணையாக) உள்ளது. சூழலியல்‌ குறித்த உங்களுடைய தொலை நோக்கு பார்வை, வழிகாட்டுதல்‌ மற்றும்‌ எல்லாவற்றையும்‌ உள்ளடக்கிய அணுகுமுறை எங்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்‌.

இதேபோல்‌, மத்திய சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்‌ பூபேந்தர்‌ யாதவ்‌ வெளியிட்டுள்ள டிவிட்டர்‌ பதிவில்‌, “சத்குரு உங்களுடைய ஆசீர்வாதத்துடன்‌, பிரதமர்‌ நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வளர்ச்சி மற்றும்‌ சுற்றுச்சூழலுக்கு இடையிலான சமநிலையைச் சரியாகப் பராமரிப்பதில்‌ துளி அளவும்‌ விலகாமல்‌ செயல்படும்‌” எனக் கூறியுள்ளார்‌.

முன்னதாக, சத்குரு நேற்று வெளியிட்ட வாழ்த்துச்‌ செய்தியில்‌, “மத்திய அமைச்சர்கள்‌, நதிகளை மீட்கச் சரியான நேரத்தில்‌ எடுத்திருக்கும்‌ வரவேற்கத்தக்க முயற்சிக்குப் பாராட்டுகள்‌. நம்‌ பொக்கிஷமான நதிகள்‌, முழு ஆற்றலுக்குப் புத்துயிரூட்டப்பட வேண்டும்‌. காடு வளர்க்கும்‌ திட்டங்கள்‌, நம்‌ நதிகள்‌ வற்றாமல்‌ ஓடுவதை உறுதிசெய்யும்‌. நல்வாழ்த்துகள்‌ & ஆசிகள்‌” எனக் கூறி இருந்தார்‌.

மத்திய அரசு வெளியிட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையானது, டேராடூனில்‌ உள்ள இந்திய வன ஆராய்ச்சி‌ மற்றும்‌ கல்வி நிறுவனத்தின்‌ வல்லுநர்களால்‌ (ICFRE) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில்‌ கூறப்பட்டுள்ள பரிந்துரைகள்‌, நதிகளை மீட்போம்‌ இயக்கத்தின்‌ பரிந்துரைகளுடன்‌ ஒத்துபோகிறது: இணையாக உள்ளது. இதன்மூலம்‌, நதிகளை மீட்போம்‌ இயக்கத்தின்‌ பரிந்துரைகள்‌ அறிவியல்பூர்வ மற்றது என்ற ஒரு சிலரின்‌ விமர்சனங்கள்‌ பொய்யாகி உள்ளது.

கடந்த 2017-ம்‌ ஆண்டு நதிகளை மீட்போம்‌ இயக்கத்தைச் சத்குரு தொடங்கி இந்தியா முழுவதும்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தினார்‌. அதன்பயனாக, அவ்வியக்கத்திற்கு 16.2 கோடி மக்கள்‌ ஆதரவு அளித்தனர்‌. மேலும்‌, நதிகளை மீட்போம்‌ இயக்கம்‌ தயாரித்த விரிவான பரிந்துரைகள்‌ அடங்கிய ஆவணத்தை பிரதமர்‌ மோடி அவர்களிடம்‌ சத்குரு வழங்கினார்‌. அதை பரிசீலித்த நிதி ஆயோக்‌ அமைப்பு அதை அங்கீகரித்து, அனைத்து மாநிலங்களுக்கும்‌ பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு நதிகளை மீட்போம்‌ இயக்கத்தின்‌ நிர்வாக குழு உறுப்பினர்கள்‌ பலரும்‌ பாராட்டு தெரிவித்துள்ளனர்‌. அதன்படி, மத்திய வேளாண்‌ துறையில்‌ பணியாற்றிய முன்னாள்‌ ஐ.ஏ.எஸ்‌. அதிகாரி பரவேஷ்‌ சர்மா கூறுகையில்‌, “நமது நதிகளுக்குப் புத்துயிரூட்டும்‌ பணியில்‌ லட்சக்கணக்கான மக்களைப் பங்கெடுக்க வைக்கவும்‌, அவர்களுக்கு உத்வேகம்‌ அளிக்கவும்‌ சத்குரு எண்ணற்ற முயற்சிகளை எடுத்து வருகிறார்‌. மத்திய அரசின்‌ இந்த நடவடிக்கை மூலம்‌ அந்த முயற்சிகளுக்குப் பலன்‌ கிடைத்துள்ளது” என கூறியுள்ளார்‌.

உச்சநீதிமன்ற முன்னாள்‌ நீதிபதி டாக்டர்‌ அரிஜிக்‌ பசாயத்‌ கூறுகையில்‌, “மனித இனம்‌ வாழ்வதற்குச் சுற்றுச்சூழலையும்‌ இயற்கை வளங்களையும்‌ பாதுகாப்பது மிகவம்‌ அவசியம்‌” என கூறியுள்ளார்‌.

இதை 'சிறப்பான முன்னெடுப்பு என பாராட்டியுள்ள பயோகான்‌ நிறுவனத்தின்‌ தலைவர்‌ கரண்‌ மசூம்தார்‌ ஷா, “தேசத்தில்‌ உணவு மற்றும்‌ நீர்‌ பாதுகாப்பைத் தவிர அதிக முக்கியத்துவம்‌ வாய்ந்தது வேறு ஏதுவாக இருக்க முடியும்‌” என குறிப்பிட்டுள்ளார்‌.

மத்திய நீர்‌ வளத்‌ துறை அமைச்சகத்தின்‌ முன்னாள்‌ செயலாளர் சசி சேகர்‌ ஐ.ஏ.எஸ்‌., கூறுகையில்‌, “மத்திய அரசின்‌ இந்த திட்டத்தில்‌ ஏராளமான மக்களின்‌ பங்களிப்பு இருக்கும்‌ என நம்புகிறேன்‌” என கூறியுள்ளார்‌.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...