கோவை கிணத்துக்கடவு அருகே உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட முதியவர் தூக்குப் போட்டு தற்கொலை..!

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சிங்கையன்புதூரில் உடல்நலம் சரியில்லாமல் அவதிபட்ட முதியவர் தூக்குப் போட்டு தற்கொலை

கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் கேட்டுக்காரர் தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் நாராயணசாமி (70). இவரது மனைவி ரத்தினம் (54). நாராயணசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப் பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மகன் கணேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து நாராயணசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...