கோவையில் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 1.02 லட்சம் டோஸ் ஊசிகள் தயார்…!

தமிழகத்தில் 12 முதல் 14 வயதுடைய பிரிவில் சுமார் 31 லட்சம் பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



கோவை: கோவையில் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 1.02 லட்சம் டோஸ் ஊசிகள் தயார் நிலையில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. முதலில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கும் பின்னர் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய் கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர், 18 வயதைத் தாண்டிய இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும், 2 தவணை தடுப்பூசி செலுத்திய சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள 60 வயதைக் கடந்தவர்களுக்கு 3வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி உள்ளது. இந்த புதிய தடுப்பூசியின் பெயர் ‘கோர்பேவேக்ஸ்’. 12 வயது பூர்த்தியான சிறுவர்கள் இத்தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இத்திட்டம் முதல் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல 60 வயதைக் கடந்த அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியும் இன்று முதல் செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் 12 முதல் 14 வயதுடைய பிரிவில் சுமார் 31 லட்சம் பேர் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் கோவை மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் அருணா கூறும் போது:-

கோவை மாவட்டத்தை பொருத்தவரை 12 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு நேரடியாக அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியது. இதற்காக ஒரு லட்சத்து, 2,200 டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. வட்டாரத்திற்கு இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள பள்ளிகளுக்குச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதைத்தவிர 24 மணி நேரமும் இயங்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சிறுவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...