கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே முன் விரோதம் காரணமாக நண்பரை அடித்து கொன்ற சக நண்பர்கள் கைது..!

குடி பழக்கத்திற்கு அடிமையான தியாகராஜன் என்பவருக்கும், செல்வபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக், ரஞ்சித் ஆகியோருக்கு, மது சம்மந்தப்பட்ட விஷயத்தில் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


கோவை: கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் நண்பரை சக நண்பர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



குடி பழக்கத்திற்கு அடிமையான தியாகராஜன் என்பவருக்கும், செல்வபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக், ரஞ்சித் ஆகியோருக்கு, மது சம்மந்தப்பட்ட விஷயத்தில் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 14ம் தேதி பி.என். புதூரில் உள்ள கம்யூனிஸ்ட் மன்றத்தில் இருந்த தியாகராஜனை, ரஞ்சித் மற்றும் கார்த்திக் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அவரை இருவரும் சேர்ந்து, விவேகானந்தா சாலை, மருதம் நகரில் வைத்து கட்டையால் அடித்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.



இதில் பலத்த காயமடைந்த தியாகராஜன் அங்கேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, அவர் இறந்து கிடப்பதைப் பார்த்த ஒருவர், தியாகராஜனின் அண்ணன், முருகானந்தம் (57) என்பவரிடம் கூறியுள்ளார். அதன்படி, இறந்த நபரின் அண்ணன் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

விசாரணையில், கொலைக்கு காரணம் கார்த்திக் மற்றும் ரஞ்சித் என்று உறுதி செய்த போலீசார் இருவர் மீதும் IPC 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...