கோவை தொண்டாமுத்தூர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை..!

இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார், சடலமாக மீட்கப்பட்ட அந்த முதியவர் யார்? எதற்காக அந்தப் பகுதிக்கு வந்தார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர், மலையடிவாரம், தனியார் தோட்டத்திற்கு செல்லும் சாலையில் சுமார் 60 முதல் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.



இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தொண்டாமுத்தூர் போலீஸ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோமதிக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கோமதி அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த தொண்டாமுத்தூர் போலீசார், சடலமாக மீட்கப்பட்ட அந்த முதியவர் யார்? எதற்காக அந்தப் பகுதிக்கு வந்தார்? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...