நீலகிரி வனப்பகுதியில் தீ வைத்த 3 பேர் கைது..!

வனத்துறையினர் பரமேஸ்வரன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையில் தீயை வைக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்த 3 பேரை கைது செய்தனர்.


நீலகிரி: நீலகிரி வனப்பகுதியில் தீ வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே வனப்பகுதியில் சிலர் தீ வைத்துள்ளனர். வனத்துறையினர் பரமேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர் திசையில் சிலர் வனப்பகுதியில் தீ வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அங்கு சென்ற வனத்துறையினர் தீயை வைக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்த 3 பேரை பிடித்துச் சென்றனர்.

விசாரணையில், அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (31), விஜயகுமார் (45), கமல்ஹாசன் (44), என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, இவர்கள் வனப்பகுதியில் தீ வைத்ததை ஒப்புக் கொண்ட நிலைகளில் வனத்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...