ஊட்டியில் நடந்த பயிற்சியில் கூடலூர், பந்தலூர், நாடுகாணி மற்றும் ஜீன்பூல் ஆகிய பகுதிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட 24 இளைஞர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
நீலகிரி: ஊட்டி தீயணைப்பு நிலையத்தில், இளைஞர்களுக்கு வனத்தீ மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், தற்போது கடுமையான வறட்சி நிலவுகிறது.
இதனால், காடுகளில் இலை சருகுகள், செடி கொடிகள் மற்றும் புற்கள் காய்ந்து எளிதில் தீப்பிடிக்கும் நிலை உள்ளது. மேலும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதனைத் தடுக்கும் பொருட்டு, வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கோடுகள் அமைப்பதுடன், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சார்பில், இளைஞர்களுக்கு ஒன்றரை மாத வனத்தீ மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, ஊட்டியில் நடந்த பயிற்சியில் கூடலூர், பந்தலூர், நாடுகாணி மற்றும் ஜீன்பூல் ஆகிய பகுதிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட 24 இளைஞர்கள் பங்கேற்றனர். இதில், நம் நாடு உட்பட பிற நாடுகளில் உள்ள காடுகளின் தன்மை, காட்டுத்தீயை காற்று வீசும் திசையில் எவ்வாறு முழுமையாக அணைப்பது குறித்து இளைஞர்களுக்கு விளக்கப்பட்டது.
ஜீன்பூல் வன விரிவாக்க மைய தாவரவியலாளர் கோமதி, சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய கள அலுவலர் குமரவேலு, கவுரவ வனப் பாதுகாவலர் மோகன்ராஜ் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன்ஆகியோர் பயிற்சி அளித்தனர்.