பெரும்பாலான இடங்களில், சோதனை நிறைவடைந்த நிலையில், காலை முதல் நடந்த சோதனையில், இதுவரை சுமார் 11.53 கிலோ தங்க நகைகள், 118 கிலோ வெள்ளி, ரொக்கம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி, உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது 2016 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவரது சகோதரரான அன்பரசன், அன்பரசனின் மனைவி ஹேமலதா மற்றும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் வடவள்ளி சந்திரசேகர், கேசிபி இன்ஜினியரிங் பங்குதாரர் சந்திரபிரகாஷ், உள்ளிட்ட 13 நபர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குறிப்பாக, அந்த காலகட்டத்தில் சுமார் ரூ.58.23 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக எழுந்த புகார் அடிப்படையில், கோவை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கூட்டு சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சந்தேகிக்கப்படும் இடங்களில் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அதில், கோவையில் 42, திருப்பூர் 2, சேலம் 4, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் தலா ஒரு இடத்திலும், சென்னை 7 மற்றும் கேரளா மாநிலம் ஆனைகட்டியில் ஒரு இடம் என 59 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

பெரும்பாலான இடங்களில், சோதனை நிறைவடைந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் இந்த சோதனை குறித்து பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர். அதில், காலை முதல் நடந்த சோதனையில், இதுவரை சுமார் 11.53 கிலோ தங்க நகைகள், 118 கிலோ வெள்ளி மற்றும் பல்வேறு ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல், கணக்கில் வராத ரூ.84 லட்சம் ரொக்கம், கைபேசிகள், பல வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக் கணினி, ஹார்ட் டிஸ்க் கைப்பற்றப்பட்டது. குறிப்பாக, சுமார் ரூ.34 லட்சம் அளவிற்கு பலதரப்பட்ட கிரிப்டோகரன்சி முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், எஸ்.பி. வேலுமணி வீட்டில் இன்னும் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.