லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நிறைவடைந்ததை அடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்ற நிலையில் சோதனையின் போது எதுவும் கைப்பற்றப்பட வில்லை என சந்திரசேகர் மனைவி சர்மிளா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கோவை: "நமது அம்மா நாளிதழ்"- வெளியீட்டாளர் வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவடைந்தது.
வருமானத்து அதிகமான சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழகம் முழுவதும் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் வடவள்ளி பகுதியில் உள்ள "நமது அம்மா நாளிதழ்" வெளியீட்டாளர் வடவள்ளி சந்திரசேகர் வீட்டில் காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
வீட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் அங்கிருந்த ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடந்தது. இந்நிலையில் தொடர்ந்து 11 மணி நேரத்திற்குப் பின் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நிறைவடைந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து சென்ற நிலையில் சோதனையின் போது எதுவும் கைப்பற்றப்பட வில்லை என சந்திரசேகர் மனைவி சர்மிளா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
