சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமனுக்கு சொந்தமான விளாங்குறிச்சியில் உள்ள அவரது வீடு மற்றும் சேரன் மாநகரில் உள்ள குடோன் ஆகிய இரண்டு இடங்களில் சோதனையானது நிறைவடைந்துள்ளது.
கோவை: சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவடைந்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, அவரது சகோதரர் எஸ் பி அன்பரசன், அன்பரசனின் மனைவி ஹேமலதா, மற்றும் எஸ் பி வேலுமணியின் நெருங்கிய நண்பரான வடவள்ளி சந்திரசேகர், கேசிபி இன்ஜினியரிங் பங்குதாரர் சந்திரபிரகாஷ் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் 58 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் கோவை மாவட்டத்தில் மட்டும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், கோவைப்புதூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி அறங்காவலர் மலர்விழி வீடு, காவல் துறை அதிகாரிகள், உள்ளிட்ட 41 இடங்களில் 6:30 முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமனுக்கு சொந்தமான வீடு, குடோன் மற்றும் பண்ணை வீடு ஆகிய 3 இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில், விளாங்குறிச்சியில் உள்ள அவரது வீடு மற்றும் சேரன் மாநகரில் உள்ள குடோன் ஆகிய இரண்டு இடங்களில் சோதனையானது நிறைவடைந்துள்ளது.
அங்கு எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது பண்ணை வீட்டில் தற்போது வரை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.