இந்த மருத்துவ முகாமில் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுதல், புதுப்பித்தல், உபகரணங்கள் இலவசமாக வழங்குதல், இலவச அறுவை சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெறுதல், மாற்றுத்திறனாளி அட்டை புதுப்பித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் உபகரணங்கள் இலவசமாக வழங்குதல், இலவச அறுவை சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்த முகாமில் புதிதாக 40-பேருக்குத் தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. 310-நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை புதுப்பிக்கப்பட்டது.