கோவை ரத்தினபுரி பகுதியில் செல்போன் டவரை திருடிச் சென்ற மர்ம நபர்கள் - காவல்துறையினர் விசாரணை..!

ரூ.18 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் டவரை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் செல்போன் டவரை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஜிடிஎல் இன்ஃப்ரா ஸ்ட்ரெச்சர் லிமிடெட் என்ற நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கோவை ரத்தினபுரி சங்கனூர் பகுதியில் ஒரு காலி இடத்தில் தங்களுடைய செல்போன் டவரை அமைத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 1.3.2021 முதல் 15.5.2021 வரை உள்ள காலத்தில் அந்த செல்போன் டவரை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து செல்போன் டவர் நிறுவனத்தின் சார்பில் அர்ஜூனன் என்பவர் ரத்தினபுரி காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, ரூ.18 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் டவரை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...