தாமதிக்காமல், மாநகராட்சி வரி செலுத்துங்கள்..! ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு

வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி இவ்வாண்டுக்கான நிறைவு நிதியாண்டு என்பதால் அரசு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் தொடர்ந்து அறிவுருத்தப்பட்டு வருகின்றது.

கோவை மாநகராட்சி வரி வசூல் மையங்களில் பணியாளர் பற்றாக்குறை காரணமாகவும் மற்றும் சர்வர் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் வரி செலுத்த வெகுநேரம் மக்கள் காத்திருந்தனர். இதன் காரணமாக பலரும் திரும்பிச் செல்லும் சூழ்நிலை ஏற்ப்பட்டது.

கோவை மாநகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி, காலியிடங்களுக்கான வரி மற்றும் குத்தகை வரிகள் மூலமே வருவாய் ஈட்டப்பட்டு வருகின்றது. இதை பயன்படுத்தியும் மத்திய மாநில அரசுகள் அளிக்கும் நிதி மூலமாகவும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கோவை மாநகராட்சியின் சார்பில் இருபத்தி ஒரு இடங்களில் வரிவசூல் மையம் செயல்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த மையங்களில் அனைவரும் வந்து அவர்களது வரியை செலுத்தி வருகின்றனர்.

வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி இவ்வாண்டுக்கான நிறைவு நிதியாண்டு என்பதால் அரசு விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படியே கடந்த வாரமும் செயல்பட்டது.

இருப்பினும் ஏராளமானோர் வரியை செலுத்தாமல் இருப்பதால் குடிநீர் இணைப்பினை துண்டிக்கும் வேளையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வீதிவீதியாக சென்று குப்பை அள்ளும் வாகனங்கள் மூலம் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துவது தொடர்பாக ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் காலை 9 மணி முதல் வரி வசூல் செய்யும் மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேற்கு மண்டல அலுவலகம், சாய்பாபா காலனி அருகே உள்ள மையங்களில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. (Counter)கவுண்டர்கள் ஒன்று மட்டுமே செயல்படுவது போன்ற காரணங்களால் வரி செலுத்துவதற்கு தாமதம் ஏற்பட்டது.

வேலைக்கு செல்லும் பலர் இன்னொரு நாள் வரி செலுத்திக் கொள்ளலாம் என்று திரும்பி சென்ற சூழ்நிலையும் ஏற்பட்டள்ளது. இன்னும் சிலர் வேறு வழியின்றி வரிசையில் காத்திருந்தனர் சர்வர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை பொறுமையுடன் காத்திருந்து வரி செலுத்தியும் சென்றனர்.

மாநகராட்சி அதிகாரி ஒருவர் இதனை பற்றி கூறுகையில்;

ஒரே நேரத்தில் அதிகமானோர் வரி செலுத்தியதால் சிறிது நேரம் சர்வர் பிரச்சினை ஏற்பட்டது. ஊழியர்களின் அவசர விடுப்பு காரணமாக சில மையங்களிலும் மாற்று பணியாளர்கள் நிதிமிப்பதில் தாமதம் ஏற்பட்டது என தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...