இதனால் மாநகரப் பகுதிகளில் மரக்கழிவு குப்பைகளின் அளவு மேலாண்மை செய்யப்படுகிறது.
கோவை: கோவை புரூக் பீல்டு நிறுவனம் சார்பில் தோட்டக்கழிவு மேலாண்மைக்காக ரூ.30 இலட்சம் மதிப்பிலான 2 டிராக்டர் மற்றும் ஷீரெடிங் இயந்திரங்களை மேயரிடம் வழங்கினார்.

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 69க்குட்பட்ட சாய்பாபா காலணி, பாரதி பூங்கா 5வது வீதியில் கோயம்புத்தூர் மாநகராட்சி பயன்பாட்டிற்கு தோட்டக்கழிவு மேலாண்மைக்காக ரூ.30 இலட்சம் மதிப்பிலான 2 டிராக்டர் மற்றும் ஷீரெடிங் இயந்திரங்களை புரூக் பீல்டு நிறுவனம் சார்பில் முதன்மை செயல் அலுவலர் அஸ்வின் பாலசுப்ரமணியம், CSR நிதி மூலமாக மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்களிடம் இன்று (15.03.2022) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. முன்னிலை வகித்தார்.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் சேகரமாகும் தோட்டக்கழிவுகள் மற்றும் மரக்கழிவுகளை வெள்ளலூர் உரக்கிடங்கிற்கு கொண்டு செல்வதால் எளிதில் தீ பிடித்து சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதால், வார்டு பகுதிகளிலேயே மரக்கழிவுகளை இதற்கான பிரத்யேக இயந்திரத்தால் பொடி செய்து அப்பகுதிலேயே மரங்களுக்கு உரமாக பயன்படுத்தவும், மற்றும் நுண் உரக்கிடங்கில் மக்கும் கழிவுகளுடன் சேர்த்து உரமாக்கவும் பயன்படுகிறது. இதனால் வெள்ளலூர் உரக்கிடங்கிற்கு செல்லும் குப்பைகளின் அளவு குறைக்கப்படுகிறது.

இவ்வகையான இயந்திரம் மண்டலத்திற்கு ஒன்று வீதம் 5 இயந்திரங்கள் உள்ளது. தற்போது புரூக் பீல்டு மால் நிர்வாகத்தினர் சமுதாய பொறுப்பு நிதி திட்டத்தின்கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பிலான கோயம்புத்தூர் மாநகராட்சி பயன்பாட்டிற்காக தோட்டக்கழிவு மேலாண்மைக்காக 2 டிராக்டர் மற்றும் ஷ்ரெடிங் இயந்திரங்களை புரூக் பீல்டு நிறுவனம் சார்பில் முதன்மை செயல் அலுவலர் அஸ்வின் பாலசுப்ரமணியம் வழங்கினார்கள். இதனால் மாநகரப்பகுதிகளில் மரக்கழிவுகளின் குப்பைகளின் அளவு மேலாண்மை செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் பி.எஸ். சரவணக்குமார், உதவி ஆணையர் (நிர்வாகம்) சரவணன், புரூக் பீல்டு முதன்மை செயல் அலுவலர் அஸ்வின்பாலசுப்ரமணியம், மார்க்கெட்டிங் மேனேஜர் சுஜாதா, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் திருமால் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.