திருப்பூரில் மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..!

சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு கோஷங்களை எழுப்பி, கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



100 நாள் வேலையைப் பாதுகாக்க, குடியிருக்க இடம் பெற, நலவாரியம் ஆக செயல்படுத்திட, ஓய்வூதியம் பெற ஆகிய கோரிக்களை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு கோஷங்களை எழுப்பி கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.



ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதியைக் குறைக்கக்கூடாது, ஆண்டுக்கு ஒரு நபருக்கு 200 நாட்கள் வேலை கொடுக்க வேண்டும், நாளொன்றுக்கு குறைந்த பட்சமாக ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும், வேலை செய்த நாட்களுக்கான சம்பள பாக்கியை உடனே வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்களை முன்வைத்தனர்.



அதேபோல், விவசாயத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்திட வேண்டும், இலவச வீட்டுமனைப்பட்டா கோரிய விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...