பொள்ளாச்சி அருகே நவமலையில் மதம்பிடித்த ஒற்றை காட்டு யானை நடமாட்டம் - மாலை 5 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியே செல்ல வனத்துறையினர் தடை..!

மேலும், நவமலையில் வாழும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென்று வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே நவமலையில் மதம்பிடித்த ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் மாலை 5 மணிக்கு மேல் நவமலை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார், கவியருவி மற்றும் நவமலை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிகிறது.

வனப்பகுதியை விட்டு அவ்வப்போது சாலையோரங்களில் வரும் இந்த யானை சாலையைக் கடப்பதும், வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களை அச்சுறுத்தியும் வருகிறது.

நவமலை பகுதியில் மலைவாழ் மக்கள், மற்றும் மின்வாரிய குடியிருப்புகளில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு ஒற்றை யானை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சரவணன் மற்றும் வாரிய குடியிருப்பைச் சேர்ந்த இருவருடன் காரில் சென்றபோது அங்கு வந்த ஒற்றை யானை காரை முட்டி மோதி கீழே தள்ளியது. இதில் மூவர் காயமடைந்தனர். பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் யானையை வனப்பகுதியில் விரட்டினர்.

இதனையடுத்து, வனச்சரகர் புகழேந்தி தலைமையிலான வனத்துறையினர் இரவு பகலாக முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நவமலை பகுதியில் மாலை 5 மணிக்கு மேல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

மாலை நேரங்களில் நவமலை குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியில் செல்லவோ வெளிநபர்கள் உள்ளே வருவதற்கு அனுமதி இல்லை என்றும், அத்தியாவசிய தேவை மற்றும் மருத்துவ சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக, இதே பகுதியில் யானை சுற்றித் திரிவதால் உச்சபட்ச மதம் பிடித்திருக்கிறது. மேலும், வாகனங்களை விரட்டுவதும், மனிதர்களை தாக்கவும் யானை முற்படுகிறது. எனவே நவமலையில் வாழும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென்று வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...