மேலும், வருமானத்தை விட 3,928 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் உறவினர்கள் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் 58 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது வரை கோவை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 58 இடங்களில் சோதனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
சென்னையில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 இடங்களிலும் கோவையில் 41 இடங்களிலும், கேரள மாநிலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் கோவை மைல்கல் பகுதியில் உள்ள வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் மீண்டும் சோதனை செய்து வருகிறார்கள்.
மேலும், அவர் தொடர்புடைய இன்னும் சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி, சகோதரர் அன்பரசன், மனைவி ஹேமலதா , நமது அம்மா நாளிதழ் வெளியீட்டார்கள் சந்திரசேகர், கட்டுமான ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ், ஒப்பந்ததாரர்கள் சுந்தரி, கார்த்திக், விஷ்ணுவர்தன், சரவணகுமார், ஆகியோர் மீதும் மகா கணபதி ஜுவல்வரி, ஆலயம் கோல்டு நகைக் கடை, கன்ஸ்ரோமால் கூட்ஸ் கட்டுமான நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து, 13 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சென்னை, கோவை, திருப்பூர், சேலம், கேரளா உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, குடும்பத்தினர் ரூ. 58.23 கோடி கூடுதலாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், வருமானத்தை விட 3,928% அதிகம் சொத்து சேர்த்ததாகவும் குற்றம்சாட்டி இருக்கிறது.
வேலுமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரின் குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், அதனால் அவர் வெளிநாட்டில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார்களா என்ற கோணத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல, கோவை அவினாசி சாலையில் ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி முதன்மை செயல் அதிகாரி மலர்விழி இல்லம், 3 காவல் துறை அதிகாரிகளின் வீடுகள், பேரூராட்சி துணை இயக்குநர் இல்லம் மற்றும் கேரளா ஆனைக்கட்டி அருகே வேலுமணி தரப்புக்கு சொந்தமாக ஓர் பண்ணை வீடு உள்ளது. கடந்தாண்டு அங்கு சோதனை நடக்கவில்லை. இப்போது கேரள பண்ணை வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.