சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை: 'மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை' என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் பேட்டி அளித்துள்ளார்.

சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ., கே.ஆர். ஜெயராம் வீட்டில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
விளாங்குறிச்சி ரோடு, சேரன்மாநகர் அருகே அமைந்துள்ள அவரது வீட்டின் முன் கட்சியினர் ஏராளமானோர் காலை முதல் கூடியுள்ளனர்.
வீட்டின் வளாகத்தில் இருந்தபடி வெளியே நின்றிருந்த கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். தனக்கு ஆதரவாக வந்தமைக்கு நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து, சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம் கூறுகையில்,

"இதுபோன்ற சோதனைகள் எல்லாம் நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். மடியில் கனமில்லை வழியிலும் பயமில்லை. சோதனை நிறைவடைந்த பின் அனைவருக்கும் இது தெரியவரும். " என்றார்.